Friday, June 20, 2008

சர்தார்ஜி ஜோக்

இங்க்லீஷ் டீச்சர் சொல்கிறார், "எல்லோரும் கிரிக்கெட் மேட்ச் பத்தி ஒரு கட்டுரை எழுதுங்க".சிறுவர்கள் பரபரவென எழுத ஆரம்பிக்க, சர்தார்ஜியின் பையன் மட்டும் டக்கென எழுதிவிட்டு அமைதியாய் உட்கார்ந்திருந்தான்.என்ன எழுதியிருக்கிறான் என இங்க்லீஷ் டீச்சர் ஆர்வத்துடன் பார்க்க, அதில் எழுதியிருந்தது."தொடர் மழையின் காரணமாக இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது"

சர்தார்ஜி ஜோக் 2

டீவி பார்த்துக்கொண்டிருந்த சர்தார் தடாலென்று எழுந்து அறையை நாலாபக்கமும் துருவித் துளாவுகிறார். சர்தாரின் மனைவி : என்ன தேடுறீங்க?சர்தார் : இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க.சர்தாரின் மனைவி : யாரு? எப்படிச் சொல்றீங்க?சர்தார் : அந்த டீவில வர்ற பயல் நான் அந்த சேனல்தான் பாக்குறேன் அப்படிங்கறத எப்படியோ கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டே இருக்கான்.சர்தாரின் மனைவி : என்ன சொல்றான்?சர்தார் : நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி.

சர்தார்ஜி ஜோக்

நம்ம பஞ்சாப் பாண்டாசிங் அமெரிக்காவுல ஒரு பீச்சுல சன் பாத் எடுத்துக் கொண்டிருக்கிறார். வித்தியாசமான தோற்றத்திலிருந்த அவரைப்பார்த்து ஒரு பெண் வந்து கேட்கிறார்."ஆர் யூ ரிலாக்ஸிங்?""இல்லை.. நான் பாண்டாசிங்."அந்தப் பெண் சென்றுவிட, மற்றொரு ஆள் வருகிறார். "ஆர் யூ ரிலாக்ஸிங்?""இல்லை..நான் பாண்டாசிங்."அந்த ஆளும் சென்றுவிட, மூன்றாமவர் வருகிறார். "ஆர் யூ ரிலாக்ஸிங்?"கடுப்பாகி அந்த இடத்தை விட்டு நகர்ந்த பாண்டாசிங், சர்தார் போலத் தோற்றமளித்த மற்றொரு நபரைப் பார்த்துக் கேட்கிறார். "ஆர் யூ ரிலாக்ஸிங்?""ஓ..யெஸ்... .ஐ ஆம் ரிலாக்ஸிங்."காதுகள் ஜிவ்வென ஆன பாண்டாசிங் கத்துகிறார் "அரே பச்சா... அங்கே எல்லாரும் உன்னத் தேடிட்டு இருக்காங்க... நீ என்னடான்னா இங்க உட்காந்துருக்கியே"

பில் கேட்ஸ்க்கு ஒரு கடிதம்...

ஐயா,
சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.
1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.
2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.
3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள். அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.
4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.
5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find" மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.
6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.
7. நான் தினமும் "Hearts" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில் தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?
8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.
9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer" ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?
10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures" என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப் போடப்போகிறீர்கள்?
11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி "Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?

Thursday, June 5, 2008

பிரதம மந்திரியின் சுதந்திர தின உரை

ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று ," நம் நாடு உலக அரங்கில் உன்னதமான இடத்தைப் பிடிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம். எல்லாத் துறைகளிலும் நாம் பிரமிக்கத் தக்க முன்னேற்றம் அடைந்திருப்பதைக் கண்டு உலக நாடுகள் கவலையடைந்துள்ளன. " என்கிற ரீதியில் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் எந்த விதமான உணர்ச்சியுமில்லாமல் பிரதம மந்திரி உரையாற்றுவது வழக்கம். இந்த வழக்கமான கப்சாக்களை விடுத்து யதார்த்தமானதொரு உரை நிகழ்த்தினால் எப்படி இருக்கும்!!!!!
ஒரு வேண்டாத கற்பனை செய்கிறார் நாரதர்!!!

வணக்கம். எனதருமை இந்தியக் குடி மக்களே!!
இன்று 61வது சுதந்திர தினம். யாராவது சாக்கலேட் கொடுத்தால் நாம் சந்தோஷத்தோடு வாங்கி சாப்பிடுகிற நாள்தான் சுதந்திர நாள்11 என்றழைக்கப் படுகிறது.
நமது நாடு எல்லாத் துறைகளிலும் வியக்கத் தக்க முன்னேற்றம் அடைந்திருக்கிறது. உண்மையில் நாம் இந்த முன்னேற்றத்தின் வேகத்தைக் கட்டுப் படுத்தத்தான் பெரிதும் போராட வேண்டியுள்ளது.
வெள்ளையனே கொள்ளையடித்துக் கொண்டிருந்த நிலைமையை மாற்றி நம்மவர்களுக்கு அந்த உரிமையை பெற்றுத் தந்த நாள் தான் இந்த ஆகஸ்ட் 15 .
எந்தெந்த துறைகளில் நாம் எந்தெந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறோம் என்பதை இந்த நன்னாளில் நாம் நினைவு கூர்வோமாக !!!!
கலைத்துறை: ஆரம்ப நாட்களில் கலைஞர்களுக்கு மட்டுமே கலையார்வம் இருந்து வந்த நிலைமை தற்போது அடியோடு மாற்றப் பட்டு, கலையறிவு இல்லாத பாமர ஜனங்களே இல்லை என்கிற நிலைமை சமீப காலமாக தொலைகாட்சி மூலம் உருவாக்கப் பட்டுள்ளது.
"இப்போது நீ‌ங்க‌ள் பார்த்த நிகழ்ச்சியில் ஒரே ஒரு இடத்தில் ஒரு நாய் வாலை ஆட்டிக் கொண்டிருந்த காட்சி இட‌ம் பெற்றிருந்தது. அந்த நாய் எத்தனை முறை வாலை ஆட்டியது ? " என்று புதிர் போட்டால் அடுத்த வாரம் 5 லட்சம் தபால் கார்டுகளில் சரியான விடையை எழுதியனுப்புவது நம் கலையறிவு வளர்திருப்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
இவ்வளவு அறிவாளிகள் வேறு எந்த நாட்டிலும் இருக்கவே முடியாது என்று நாம் நெஞ்சு நிமிர்த்தி சொல்ல முடியும். அதே போல