Thursday, June 5, 2008

பிரதம மந்திரியின் சுதந்திர தின உரை

ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று ," நம் நாடு உலக அரங்கில் உன்னதமான இடத்தைப் பிடிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம். எல்லாத் துறைகளிலும் நாம் பிரமிக்கத் தக்க முன்னேற்றம் அடைந்திருப்பதைக் கண்டு உலக நாடுகள் கவலையடைந்துள்ளன. " என்கிற ரீதியில் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் எந்த விதமான உணர்ச்சியுமில்லாமல் பிரதம மந்திரி உரையாற்றுவது வழக்கம். இந்த வழக்கமான கப்சாக்களை விடுத்து யதார்த்தமானதொரு உரை நிகழ்த்தினால் எப்படி இருக்கும்!!!!!
ஒரு வேண்டாத கற்பனை செய்கிறார் நாரதர்!!!

வணக்கம். எனதருமை இந்தியக் குடி மக்களே!!
இன்று 61வது சுதந்திர தினம். யாராவது சாக்கலேட் கொடுத்தால் நாம் சந்தோஷத்தோடு வாங்கி சாப்பிடுகிற நாள்தான் சுதந்திர நாள்11 என்றழைக்கப் படுகிறது.
நமது நாடு எல்லாத் துறைகளிலும் வியக்கத் தக்க முன்னேற்றம் அடைந்திருக்கிறது. உண்மையில் நாம் இந்த முன்னேற்றத்தின் வேகத்தைக் கட்டுப் படுத்தத்தான் பெரிதும் போராட வேண்டியுள்ளது.
வெள்ளையனே கொள்ளையடித்துக் கொண்டிருந்த நிலைமையை மாற்றி நம்மவர்களுக்கு அந்த உரிமையை பெற்றுத் தந்த நாள் தான் இந்த ஆகஸ்ட் 15 .
எந்தெந்த துறைகளில் நாம் எந்தெந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறோம் என்பதை இந்த நன்னாளில் நாம் நினைவு கூர்வோமாக !!!!
கலைத்துறை: ஆரம்ப நாட்களில் கலைஞர்களுக்கு மட்டுமே கலையார்வம் இருந்து வந்த நிலைமை தற்போது அடியோடு மாற்றப் பட்டு, கலையறிவு இல்லாத பாமர ஜனங்களே இல்லை என்கிற நிலைமை சமீப காலமாக தொலைகாட்சி மூலம் உருவாக்கப் பட்டுள்ளது.
"இப்போது நீ‌ங்க‌ள் பார்த்த நிகழ்ச்சியில் ஒரே ஒரு இடத்தில் ஒரு நாய் வாலை ஆட்டிக் கொண்டிருந்த காட்சி இட‌ம் பெற்றிருந்தது. அந்த நாய் எத்தனை முறை வாலை ஆட்டியது ? " என்று புதிர் போட்டால் அடுத்த வாரம் 5 லட்சம் தபால் கார்டுகளில் சரியான விடையை எழுதியனுப்புவது நம் கலையறிவு வளர்திருப்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
இவ்வளவு அறிவாளிகள் வேறு எந்த நாட்டிலும் இருக்கவே முடியாது என்று நாம் நெஞ்சு நிமிர்த்தி சொல்ல முடியும். அதே போல

No comments: